thicoepattu@gmail.com +91 86103 72861 | +91 78453 88009

"எல்லோர்க்கும் பட்டு"

திருபுவனம் திகோசில்க்ஸ் பட்டுச்சேலையை வாங்கி உடுத்த எல்லோருமே விரும்புவார்கள். ஏன் என்றால், அதன் தரமும் பாரம்பரியமும் அத்தகையது! தரம் மிகுந்த பொருட்களின் விலை சற்று கூடுதலாக இருப்பது கண்கூடு. 

திகோசில்க்ஸ் பட்டுச்சேலையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒட்டுமொத்தமாக தொகை செலுத்தி ஒரு பொருளை வாங்குவதில் மாத சம்பளக்காரர்களுக்கு இருக்கும் சிரமத்தை நன்குணர்ந்தே “எல்லோர்க்கும் பட்டு” என்கிற மாதாந்திர சேமிப்புத் திட்டத்தை திகோசில்க்ஸ் முன்னெடுத்திருக்கிறது. வாங்கும் சக்தியை அதிகரிக்க உதவும் இந்த சேமிப்புத் திட்டத்தில் யார் ஒருவரும் பங்குபெற்று, மாதா மாதம் தவணைகளை செலுத்தி திகோசில்க்ஸ் பட்டுச்சேலைகளை சுலபமாக இனி வாங்கலாம்.

திட்ட விபரம்

  • 11 மாத தவணைத்திட்டம் இது.
  • மாத தவணை குறைந்தபட்சம் ரூ.1000/- ஆகும். மாத தவணை அதிகம் செலுத்த விரும்புவோர் 1000த்தின் மடங்கில் தவணைகளை செலுத்திவரலாம்.
  • திட்டத்தின் முடிவில் ஒரு மாத தவணை தொகையில் பாதி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
  • திட்டத்தின் முடிவில் பட்டுச்சேலை வாங்கும்போது திட்டத்தின் சந்தாதாரர் VIP ஆக கருதப்பட்டு அவர் வாங்கும் புதிய பட்டுச்சேலைக்கு 5 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் (இது போனஸ் கணக்காக பாவிக்கப்படும்).
  • திட்டத்தில் உள்ள எல்லோர்க்கும் சங்கம் மற்றும் அரசாங்கம் வழங்கும் வழக்கமான தள்ளுபடிகளும் வழங்கப்படும். (10% + 200 or 20% + 200 or 35% to 55%) இத்திட்டம் திகோசில்க்ஸின் அனைத்து கிளை விற்பனை நிலையங்களிலும் செயல்படுத்தப்படும்.
  • திட்டத்தின் முடிவில், சந்தாதாரர் திகோசில்க்ஸின் எந்த கிளை விற்பனை நிலையத்திலோ அல்லது தலைமையகத்திலோ தான் விரும்பும் பட்டுச்சேலையைத் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.
  • இத்திட்டத்தின் கீழ் செலுத்திய தொகைக்கு பட்டுச்சேலைகள் மட்டுமே வழங்கப்படும். எக்காரணம் கொண்டும் பணம் திரும்ப வழங்கப்படமாட்டாது

இந்த திட்டத்தில் சேர விரும்பும் வாடிக்கையாளர்கள் உரிய விண்ணபத்தை பூர்த்தி செய்து முதல் தவணையினை நேரடியாக சங்க தலைமையகம் அல்லது குறிப்பிட்ட கிளைகளில் வழங்கியவுடன் அவர்களுக்கு ஓர் 9 இலக்க பதிவு எண் தரப்படும். பிற தவணைகளை RTGS பணம் செலுத்துவதற்கான பிற வங்கிச் சேவைகள்-G-Pay, Paytm போன்ற மொபைல் போன் சேவைகள் மூலமாகவோ அல்லது; சங்கத்திற்கு நேரடியாக வந்து பணமாகவோ அவர்களுக்குரிய பதிவு எண்ணில் தொகை செலுத்த வேண்டும். (அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கி மற்றும் மொபைல் போன் சேவைகள் மூலம் செய்வதே சிறப்பானதாகும்)